science

img

வியாழன் கிரகத்தை தாக்கிய விண்கல்!

வியாழன் கிரகத்தை விண்கல் ஒன்று தாக்கிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

சூரியக் குடும்பத்தில் மிகப்பெரிய கிரகமாக வியாழன் விளங்குகிறது. இந்த கிரகத்துக்குள் விண்கல் ஒன்று சீறிப் பாய்ந்து தாக்கும் காட்சியை ஈதன் சாப்பல் என்ற வானியல் அறிஞர், செலெஸ்டிரான் 8 டெலஸ்கோப் மூலம் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் வியாழனில் இடதுபுறம் கீழாக வெள்ள நிறப் புள்ளி ஒன்று தென்படுகிறது. இது மிகப்பெரிய விண்கல் ஒன்று, வேகமாக தாக்கியதை காட்டுகிறது. இதுகுறித்து ஈதன் சாப்பல், தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளர். 

இதற்கு முன்பு கடந்த 1994-ஆம் ஆண்டு, வியாழன் கிரகத்தை எஸ்.எல்.9 என்ற விண்கல் தாக்கியது படம்பிடிக்கப்பட்டது. இது சூரியனின் மேற்பரப்பை விட அதிக வெப்பம் நிறைந்தது ஆகும். இதனை வானியல் அறிஞர் டாக்டர்.ஹெய்டி பி.ஹாம்மெல் ஹப்பிள் டெலஸ்கோப் மூலம் படம்பிடித்திருந்தார். இவர் தற்போது சாப்பலின் கண்டுபிடிப்பை வெகுவாக பாராட்டியுள்ளார். அதேசமயம் கடந்த ஜூன் 27-ஆம் தேதி, நாசாவும் வியாழன் கிரகத்தின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

;